தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல் தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மணிகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்படுவதோடு, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள நெல் அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படும். அதன் படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள சேமிப்பு கிடங்கு மற்றும் அரிசி ஆலைகளில் இருந்து 1,250 டன் புழுங்கல் அரிசி ஏராளமான லாரிகளில் ஏற்றி தஞ்சை ரயில் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் சரக்கு ரயிலின் 21 வேகன்களில் ஏற்றப்பட்டு பொதுவினியோகத் திட்டத்திற்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.