தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 126 வழக்குகளுக்கு தீர்வு

காங்கயத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 126 வழக்குகளுக்கு தீர்வு 5 கோடியே 10 லட்சம் மதிப்பிற்கு சமரசத் தீர்வு காணப்பட்டது

Update: 2024-09-15 03:09 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காங்கேயத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாளாகத்தில் நேற்று வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காங்கேயம் வட்டச் சட்ட பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதியுமான சந்தான கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார் மற்றும் வழக்கறிஞர் நவீன் ஆகியோர் முதல் அமர்விலும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மாலதி மற்றும் வழக்கறிஞர் பாரதி ஆகியோர் இரண்டாம் அமர்விலும் பங்கேற்றனர். இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சொத்து வழக்குகள், மோட்டார் வாகன சிறு வழக்குகள் என மொத்தம் 347 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வழக்குகளில் 126 வழக்குகளுக்கு ரூ 5 கோடியே 10 லட்சம் மதிப்பிற்கு சமரச தீர்வு காணப்பட்டது.

Similar News