செண்பகப்புதூர் ஊராட்சியில் ரூ.13 லட்சத்தில் தார் சாலை
செண்பகப்புதூர் ஊராட்சியில் ரூ.13 லட்சத்தில் தார் சாலை
செண்பகப்புதூர் ஊராட்சியில் ரூ.13 லட்சத்தில் தார் சாலை சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகப்புதூர் ஊராட்சிக் குட்பட்ட மேட்டூரில் தார் சாலை அமைக்க ரூ.5 லட்சம், மற்றொரு பகுதியில் தார்சாலை அமைக்க ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. இததைத்தொடர்ந்து தார் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலை வர்கே.சி.பி.இளங்கோ தலைமை தாங்கி, பணியை தொடங்கி வைத்தார். இதில் செண்பகப்புதூர் ஊராட்சி முன்னாள் தலைவர் வி.சி.வரதராஜ், மாவட்ட கவுன்சிலர் முத்துலட்சுமி பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய தி.மு.க. துணைச்செயலாளர் அசோகன், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் ரகு, இளைஞர் அணி அமைப்பாளர் சந்தோஷ்குமார், மாணவர் அணி அமைப்பாளர் சஞ்சய் குமார், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் வினோத் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் உள்பட - பலர் கலந்து கொண்டனர்