வெங்கரை பேரூராட்சி கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

வெங்கரை பேரூராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

Update: 2025-01-01 15:22 GMT
பரமத்தி வேலூர், ஜன.1: பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை பேரூராட்சி கூட்டம் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரவீந்தர் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவானந்தம் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- வெங்கரை பேரூராட்சிக்கு சொந்தமான அனைத்து பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளுதல். வெங்க ரை பேரூராட்சியில் அனைத்து வார்டு பகுதிகளிலும் நடைபெற்ற வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டத்தில் பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தல். வெங்கரை பேரூராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் தார் சாலைகளை பலப்படுத்து தல். வெங்கரை பேரூராட்சிக்கு கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணியினை. மேற்கொள்ளுதல். வெங்கரை பேரூராட்சியில் தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் திட்ட பராமரிப்பு மற்றும் பொது சுகாதார உபயோகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க ஒப்பந்தம் கோருதல் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி இளநிலை உதவியாளர் சண்முக வடிவு மற்றும் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News