சேலத்தில் மூதாட்டி வீட்டில் கதவை உடைத்து 13½ பவுன் திருட்டு
போலீசார் விசாரணை;
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியம் (வயது 61). சம்பவத்தன்று மூதாட்டி வீட்டில் இருந்து வெளியில் சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டில் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 13½ பவுன் நகைகள் திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து மூதாட்டி கிச்சிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.