பரமத்தி வேலூரில் ரூ.13 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்.

பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ.13 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.;

Update: 2025-06-06 12:23 GMT
பரமத்திவேலூர்,ஜூன்.6:    பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் வெங்கமேட்டில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை உள்ளது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமையன்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும். இந்த சந்தைக்கு பரமத்தி வேலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்தும், கரூர் மாவட்டத்தில் இருந்தும் தென்னை விவசாயிகள் ஏராளமானவர்கள் தேங்காய் பருப்புகளை ஏலத்திற்கு கொண்டு வருவார்கள். இதனை ஏலம் எடுப்பதற்காக பரமத்திவேலூர்,ஈரோடு, வெள்ளக்கோவில்,காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  வியாபாரிகள் பலர் வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சந்தையில் தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு மொத்தம் 7 ஆயிரத்து 490 கிலோ தேங்காய் பருப்புகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். இது கடந்த வாரத்தை விட குறைவாகும். மேலும் கடந்தவாரம் நடந்த ஏலத்தில் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.216.69-க்கும், குறைந்த பட்சமாக ரூ.191,99-க்கும், சராசரியாக ரூ.214.39-க்கும் ஏலம் போனது இரண்டாம் தர தேங்காய் பருப்பு அதிக பட்சமாக கிலோ ஒன்று ரூ.180.19-க்கும், குறைந்தபட்சமாக கிலோ ஒன்று ரூ.156.78-க்கும்,சராசரியாக கிலோ ஒன்று ரூ.178.88-க்கும் ஏலம் போனது.   நேற்று நடைபெற்ற ஏலத் தில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 213.99-க்கும், குறைந்த பட்சமாக ரூ.180.10-க்கும். சராசரியாக ரூ.212.99-க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர தேங்காய் பருப்பு அதிக பட்சமாக கிலோ ஒன்று ரூ.178.99-க்கும், குறைந்தபட்சமாக கிலோ ஒன்று ரூ.146.66-க்கும். சராசரியாக கிலோ ஒன்று ரூ.173.19-க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ.13லட்சத்து 85 ஆயிரத்து 650-க்கு தேங்காய் பருப்பு விற்பனை ஆனது.

Similar News