கோவை: 13 வயது மாணவியை மோதிய ஆட்டோ – சம்பவ இடத்திலே உயிரிழப்பு!
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி மீது ஆட்டோ ஏறி விபத்தை உண்டாக்கியதில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.;
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் பாலன், சாவித்திரியின் 13 வயது மகள் சௌமியா, கெம்பட்டி காலனி மாநகராட்சி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை, பள்ளிக்குப் பிறகு பாட்டி வீட்டிலிருந்து வீடு செல்ல அறிவொளி நகர் பகுதியில் நடந்து சென்ற போது, எதிரே வந்த டாடா ஏஸ் (குட்டி யானை) ஆட்டோ சௌமியாவை மோதியது. இதில் கீழே விழுந்த மாணவி கல்லில் தலையை இடித்துக் கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பெரியகடை வீதி போலீசார் விரைந்து வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் உட்பட இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.