சுரண்டை கூட்டுறவு வங்கி சாா்பில் ரூ. 1.30 கோடி கடனுதவி
கூட்டுறவு வங்கி சாா்பில் ரூ. 1.30 கோடி கடனுதவி;
திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிதென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் சுரண்டை கிளையில் மகளிா் குழுக்களுக்கு ரூ.1.30 கோடி கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு, வங்கியின் மேலாண்மை இயக்குனரும், இணைப் பதிவாளருமான திலீப் குமாா் தலைமை வகித்து, 10 மகளிா் சுய உதவி குழுக்களுக்கு மொத்தம் ரூ.1.30 கோடி கடனுதவியை வழங்கினாா். இதில், வங்கி கிளை மேலாளா் சங்கரவேலு, அலுவலா்கள் கலந்து கொண்டனா். மேலும், மே 3ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஆலங்குளம் பல்நோக்கு சமுதாய நல கட்டடத்தில் கடன் மேளா நடைபெற உள்ளது. அதில், வங்கியின் மூலம் வழங்கும் அனைத்து கடன்களையும் நிபந்தனைக்குள்பட்டு தகுதி உள்ளவா்கள் பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டது.