விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த மூவர் கைது. 1,300 கிராம் கஞ்சா பறிமுதல் 

கைது;

Update: 2025-03-21 17:22 GMT
தஞ்சாவூர் அருகே வல்லம் காவல் நகர் சுடுகாடு பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த மூன்று வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1,300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர் அருகே வல்லம் பகுதியில் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல் நகர் சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த மூன்று வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் அரியலூர் மாவட்டம் பொய்த்தாநல்லூர் வேப்ப மரத்தெரு பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் அருள்செல்வம் (18), தஞ்சாவூர் மனோஜிப்பட்டி வன துர்கா நகர் வர்கீஸ் என்பவரின் மகன் சூரிய பிரகாஷ் (20), தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி கார்த்திக் நகர் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் ராஜ் கண்ணன் (21) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் மூவரும் விற்பனைக்காக 1.300 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வல்லம் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.13 ஆயிரம் என்று கூறப்படுகிறது.

Similar News