சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 134- வது பிறந்தநாள் ரத ஊர்வலம்
சீராவட்டம் தொடங்கி கீழையூர் கடைத்தெரு வரை 4 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது;
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 134- வது பிறந்தநாளை முன்னிட்டு, நாகை மாவட்டம் கீழையூர் அருகே சீராவட்டம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிறந்த நாள் ரத ஊர்வல நிகழ்ச்சி சட்ட மன்ற தொகுதி அமைப்பாளர் வழக்கறிஞர் பாமரன் பகவத்சிங் தலைமையில் நடைப்பெற்றது.மாநில செயலாளர் தமிழ்பாண்டியன், ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் வேலு.குபேந்திரன் கட்சி கொடியினை ஏற்றி வைத்து அலங்கரிக்கப்பட்ட புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் ரத ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் கீழையூர் கடைத்தெரு வரை 4 கி.மீ தூரம் மேளதாளங்கள் முழங்க ஏராளமான விசிகவினர் வீர முழக்கமிட்டு சென்றனர். நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் கதிர்நிலவன், மாவட்ட துணை செயலாளர் பேரறிவாளன், மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரகுமார், நாகூர் முருகன், அனந்தகிருஷ்ணன், வேதை தொகுதி செயலாளர் இளையராஜா, பேரூர் செயலாளர் மாரி ஜீவா, விடுதலை வீரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.