அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருஉருவச் சிலைக்கு தேனி மாவட்ட தமமுக சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

அம்பேத்கர்;

Update: 2025-04-14 13:26 GMT
அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக தேனியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் தேனி மாவட்ட கிழக்கு செயலாளர் மள்ளர் பாலா தலைமையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தேனி அரண்மனைபுதூரில் உள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மள்ளர் பாலா தேனி மாவட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினர் மீது காவல்துறை தொடர் அடக்கு முறையை கையாண்டு வருகிறது கடந்த சில நாட்களுக்கு முன்பு தமமுக மேற்கு மாவட்ட செயலாளரை எந்தவித அடிப்படை காரணம் என்று போலீசார் கைது செய்தனர் தொடர்ந்து என் மீதும் வழக்கு பதிந்து சிறையில் அடைக்க முற்பட்டனர் தொடர்ந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களை காவல்துறையினர் அடக்க முற்படுகின்றனர் நாங்கள் காவல்துறையினரிடம் இணக்கமாக தான் இருக்கின்றோம் தொடர்ந்து எங்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறையை கையாண்டால் தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் மீண்டும் தேனி மாவட்டத்தில் புரட்சி வெடிக்கும் என தெரிவித்தார்

Similar News