அருப்புக்கோட்டையில் பேரரசர் முத்தரையரின் 1350 வது சதய விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அருப்புக்கோட்டையில் பேரரசர் முத்தரையரின் 1350 வது சதய விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.;

Update: 2025-05-23 13:01 GMT
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பேரரசர் முத்தரையரின் 1350 வது சதய விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி பகுதியில் விருதுநகர் வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் தலைமையில் பேரரசர் முத்தரையர் 1350 ஆவது சதய விழாவை முன்னிட்டு முத்தரையர் முழு உருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் எம்ஜிஆர் இளைஞர் அணி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.ஜி விமல் குருசாமி ஏற்பாட்டில் அப்பகுதி பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் ஆர் ராஜவர்மன், எஸ் ஜி சுப்பிரமணியன், எம்ஜிஆர் இளைஞர் அணி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் ஜி விமல் குருசாமி, வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சங்கரலிங்கம் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Similar News