ஜமாபந்தியில் 136 பயனாளிகளுக்கு நல உதவி வழங்கல்

உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில், இந்த ஆண்டுக்கான ஜமாபந்தி நிறைவு விழா;

Update: 2025-05-31 06:01 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில், இந்த ஆண்டுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி, கடந்த 21ல் துவங்கி, 30 - ம் தேதி வரை வரை நடந்தது. ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடந்தது. அதில், வருவாய் துறை, வேளாண்மை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின்கீழ், 136 பயனாளிகளுக்கு, 59.69 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர், வருவாய் கோட்டாட்சியர் ஆஷிக் அலி, தாசில்தார் தேன்மொழி உட்பட பலர் பங்கேற்றனர்.

Similar News