கிருஷ்ணகிரி பெண்களுக்கான 14 நாட்கள் இலவச சணல் பை தயாரித்தல் பயிற்சி
கிருஷ்ணகிரி பெண்களுக்கான 14 நாட்கள் இலவச சணல் பை தயாரித்தல் பயிற்சி;
கிருஷ்ணகிரி மாவட்டம், கே.ஆர்.பி அணையில் அமைந்துள்ள இந்தியன் வங்கி நடத்தும் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன அலுவலகத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் வளாகப் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மகளிர், இளைஞர்களுக்கு தொழில் துவங்குவதற்கு, பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பெண்களுக்கான 14 நாட்கள் கொண்ட இலவச சணல் பை மற்றும் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 18 வயது நிரம்பியவர்கள் முதல் 45 வயதுக்குட்பட்டோர் வரை உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் வருகிற 28 ஆம் தேதி திங்கட்கிழமைக்குள் அலுவலகத்திற்கு நேரில் வந்து இப்பயிற்சிக்கு விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம்.