மாணவிகளுக்கான தடகளப் போட்டி நவம்பர் 14ம் தேதி திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான தடகளப் போட்டி கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில் நடைபெற உள்ளது.;

Update: 2025-11-10 14:35 GMT
இந்திய தடகள சம்மேளம் மற்றும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து மத்திய அரசின் ஆதரவுடன் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திறமையான பெண் தடகள வீராங்கனைகளை கண்டறிந்து அவர்களை உலக அளவிலும், ஒலிம்பிக் அளவிலும் பங்கேற்க செய்து வெற்றி பெறுவதற்கான அனைத்து விதமான உதவிகள் அளிக்கப்படுகிறது அதன்படி அஸ்மிதா என்ற பெயரில் 14 மற்றும் 16 வயதிற்கு உட்பட்ட பெண் வீராங்கனைகளுக்கு தடகளப் போட்டிகள் நடத்தப்படுகிறது என்று நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் AKP.சின்ராஜ்,Ex.MP மற்றும் தடகள சங்கத்தின் செயலாளர் Dr.வெங்கடாசலபதி ஆகியோர் தெரிவித்தனர். இந்தியா முழுவதிலும் இருந்து 300 மாவட்டங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் நாமக்கல் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் அளவிலான இந்த தடகளப் போட்டிகள் வரும் நவம்பர் 14ஆம் தேதி திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில் நடைபெற உள்ளது.வயது வரம்பு:14 வயதுக்கு உட்பட்ட பெண் சிறுமிகள்21.12.2011 முதல் 20.12.2013 தேதிக்குள்ளாக பிறந்திருக்க வேண்டும் 16 வயதுக்கு உட்பட்ட பெண் சிறுமிகள் 21.12.2009 முதல் 20.12.2011 தேதிக்குள்ளாக பிறந்திருக்க வேண்டும் 14 வயதுக்கு உட்பட்ட பெண் சிறுமிகளுக்கு டிரையத்லான் பிரிவு எ,பி,சி மற்றும் கிட்ஸ் ஜவலின் என நான்கு போட்டிகளும்,16 வயதுக்கு உட்பட்ட பெண் சிறுமிகளுக்கு 60மீ, 600மீ, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் , குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் என ஏழு போட்டிகள் நடைபெறுகின்றது. போட்டி சம்பந்தமான விபரங்களுக்கு நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் இணைச்செயலாளர் கார்த்தி 9444879213, 8610123646 அவர்களை தொடர்பு கொள்ளவும்.

Similar News