மாணவர்களின் சுகாதார நலன் கருதி கழிப்பிடம் கட்டுவதற்கு 14.5 லட்சத்தில் பூமி பூஜை

மாணவர்களின் சுகாதார நலன் கருதி கழிப்பிடம் கட்டுவதற்கு 14.5 லட்சத்தில் பூமி பூஜை

Update: 2024-09-11 04:07 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மாணவர்களின் சுகாதார நலன் கருதி கழிப்பிடம் கட்டுவதற்கு 14.5 லட்சத்தில் பூமி பூஜை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட என்.சி.பி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுடைய சுகாதார நலன் கருதி கழிப்பிடம் கட்டுவதற்கு ரூபாய் 14.5 லட்சம் மதிப்பீட்டில் நேற்று தாராபுரம் நகர மன்ற தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜையை தொடர்ந்து நகர மன்ற தலைவர் பேசுகையில், படிக்கும் மாணவர்களுக்கு சுகாதாரம் என்பது அவசியம் எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு என்.சி.பி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கழிப்பிடம் கட்டப்படுகிறது. இதில் நகர கழக செயலாளரும் நகர மன்ற உறுப்பினர் பொறியாளர் சு. முருகானந்தம் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர் ,மாவட்ட பிரதிநிதிகள் கே.சீனிவாசன், எஸ்.எம். யூசுப் ,நகர மன்ற உறுப்பினர் முபாரக் அலி,ஷீலா தேவிமாதவன்,கிளைக் கழகச் செயலாளர் நல்ல சேனாபதி,அக்பர் பாஷா,பள்ளி மேலாண்மை குழு தலைவர் தன்வீர் பர்கத் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News