பரமத்தி வேலூர்,வெங்கரை பேரூராட்சிகளில் ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் 3 உயர் மின் கோபுர விளக்குகள் திறப்பு.
பரமத்தி வேலூர்,வெங்கரை பேரூராட்சிகளில் ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் 3 உயர் மின் கோபுர விளக்குகள் திறப்பு மாதேஸ்வரன் எம்.பி., கே.எஸ்.மூர்த்தி திறந்து வைத்தனர்.;
பரமத்திவேலூர்,.29: நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த நிதியில் இருந்து பரமத்தி வேலூர் பேரூராட்சி 19- வது வார்டு மாரியம்மன் கோவில் 'சின்டெக்ஸ் டேங்க் அருகில் ரூ.3.50 லட்சம். மதிப்பீட்டில் உயர் கோபுரம் மின்விளக்கு அமைக்கப்பட்டது. அதேபோல் பரமத்தி வேலூர் 9-வது வார்டு குமாரமங்கலம் வாரச்சந்தையில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. 2 உயர் மின் கோபுர விளக்குகள் திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு பேரூர் தி.மு.க. செயலாளர் முருகன் தலைமை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட வக்கில்கள் அணி துணை அமைப்பாளர்கள் மேற்கு பாலகிருஷ்ணன் செந்தில்குமார், நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பேரூர் தி.மு.க. அவை தலைவர் மதியழகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக கொ.ம.தே.க. கட்சியின் நாமக்கல் மாதேஸ்வரன் எம். பி. மற்றும் நாமக்கல் மேற்கு மாவட்டதி.மு.க. பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு 2 உயர்மின் கோபுர மின்விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். முன்னதாக வெங்கரை பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் உள்ள விளையாட்டு திடலில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட உயர் மின் கோபுர விளக்கையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் வேலூர் பேரூர் தி.மு.க. துணை செயலாளர் செந்தில்நாதன், பேரூராட்சி உறுப்பினர்கள். மாவட்ட, ஒன்றிய, பேரூர் தி. பல்வேறு அணி பொறுப்பாளர்கள் மகளிர் அணி பொறுப்பாளர்கள் மற்றும் கொ.ம.தே.க. மாநில செயற்குழு உறுப்பினர் செயலாளர் சக்திவேல்,கொ.ம.தே.க. நிர்வாகிகள் தமிழ்மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதே போல் வெங்கரை பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் உள்ள விளையாட்டு திடலில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழாவும் நடைபெற்றது.