மாவட்டத்திற்கு ரூ.147 கோடியில் 4,200 கனவு இல்ல திட்ட வீடுகள்

வீடுகள்

Update: 2024-09-14 02:56 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தினை கலெக்டர் பிரசாந்த் நேற்று பார்வையிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின்கீழ் குடிசையில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு புதிதாக ஆர்.சி.சி. வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் காளசமுத்திரம், வி.மாமந்தூர் ஊராட்சி பகுதிகளில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின்கீழ் சின்னசேலம் ஒன்றியம்-649 வீடுகள், கள்ளக்குறிச்சி-568, கல்வராயன்மலை-101, திருக்கோவிலூர்-489, ரிஷிவந்தியம்-674, சங்கராபுரம்-342, தியாகதுருகம்-611, திருநாவலூர்-372, உளுந்தூர்பேட்டை-394 வீடுகள் என மொத்தம் 9 ஊராட்சி ஒன்றியங்களில் 4,200 வீடுகள் தலா ரூ.3.50 லட்சம் என மொத்தம் ரூ.147 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இதில் பயனாளிகள் வீடு கட்டுவதற்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய வீடு கட்டும் பணிகளை தரமான கட்டுமானப் பொருட்களை கொண்டு விரைவாக கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்தார்.

Similar News