சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் அமைக்க பூமி பூஜை.

பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் அமைக்க எம்.எல்.ஏ சேகர் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது.

Update: 2024-08-23 14:01 GMT
பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பரமத்தி ஒன்றியத்தில் பிராந்தகம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து சமுதாயக்கூடம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் அமைப்பதற்கு பூமி பூஜை இன்று நடைபெற்றது. பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் S.சேகர் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பரமத்தி அ.தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் A.M.வெற்றிவேல், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சு.தமிழ்மணி,பிராந்தகம் ஊராட்சி மன்ற தலைவர்,கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News