கிராம மக்கள் முற்றுகை 15 நிமிடத்தில் முடிந்த கிராம சபை கூட்டம்.

கழிப்பிட வசதி இல்லை, குடிநீர் இல்லை, சாக்கடை வசதி இல்லை என்று அடுக்கடுக்காக கோரிக்கைகள் வைத்தும் எந்த வசதியும் இல்லாமல் கிராம மக்கள் பாதுகாப்பு இல்லாமல் அவதிப்படுகின்றோம் என தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பதிலளிக்க முடியாமல் அரச அதிகாரிகள் திணறினர்.;

Update: 2025-01-26 15:12 GMT
பெரம்பலூர் அருகே கிராம மக்கள் முற்றுகை 15 நிமிடத்தில் முடிந்த கிராம சபை கூட்டம். பெரம்பலூர் அருகே நொச்சியம் கிராமத்தில் இன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவிடம் கிராம மக்கள் சரியாக சாலை அமைக்கவில்லை, கழிப்பிட வசதி இல்லை, குடிநீர் இல்லை, சாக்கடை வசதி இல்லை என்று அடுக்கடுக்காக கோரிக்கைகள் வைத்தும் எந்த வசதியும் இல்லாமல் கிராம மக்கள் பாதுகாப்பு இல்லாமல் அவதிப்படுகின்றோம் என தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பதிலளிக்க முடியாமல் அரச அதிகாரிகள் திணறினர். இதைத் தொடர்ந்து அவசர அவசரமாக கிராம சபை கூட்டம் 15 நிமிடத்தில் முடிக்கப்பட்டு அனைவரிடமும் வேகமாக கோரிக்கை மனுக்களை பெற்று மாவட்ட ஆட்சியர் அந்த இடத்தில் இருந்து கிளம்பினார். இதனால் அந்த கிராமத்தில் கிராம சபை கூட்டம் முடியும் வரை பரபரப்பு ஏற்ப்பட்டது.

Similar News