தேன்கனிக்கோட்டை: அருகே 15 வயது சிறுவன் போக்சோவில் கைது.

தேன்கனிக்கோட்டை: அருகே 15 வயது சிறுவன் போக்சோவில் கைது.;

Update: 2025-04-05 02:12 GMT
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் தேன்கனிக் கோட்டை அருகே உள்ள உப்புப்பள்ளம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார் அப்போது அதே பகுதியை சேர்ந்த 7 வயது மதிக்கத்தக்க 2 சிறுவர்கள் மேலும் 10 வயது ஒரு சிறுவன் எனறு 3 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். மேலும் செல்போனில் தவறான படங்களை சிறுவர்களுக்கு காட்டியும். பீடி, சிகரெட் குடிக்குமாறு கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவ னின் தாயார் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 15 வயது சிறுவனை கைது செய்தனர்.

Similar News