அன்னை மகளிர் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
அன்னை மகளிர் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;
அன்னை மகளிர் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே புன்னம் சத்திரம் பகுதியில் செயல்படும் அன்னை மகளிர் கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இன்று கல்லூரி வளாகத்தில் 15வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் நிறுவனர் & செயலாளர், முன்னாள் எம்எல்ஏ மலையப்ப சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்று கல்லூரி அறிக்கையை முதல்வர் சாருமதி வாசித்தார். சிறப்பு விருந்தினராக முனைவர் சாந்தி பங்கேற்றார். நிகழ்ச்சியில் ASAET தலைவர் மருத்துவர் முத்துக்குமார் சிறப்புரை வழங்கினார். பொருளாளர் கந்தசாமி, முன்னாள் தலைவர் தங்கராஜ் உள்ளிட்ட கல்லூரி மாணவிகள் அவரது பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்றைய நிகழ்ச்சியில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்த மாணவிகள் 550-க்கும் மேற்பட்டோர் ஒருவர் பின் ஒருவராக மேடைக்கு வரிசையாக வந்து பட்டங்களை பெற்றுக் கொண்டனர். அவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் வாழ்த்து தெரிவித்தனர். பட்டங்களை பெற்றுக் கொண்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.