ஜெயங்கொண்டம் அருகே 15 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட மாணவர்கள் - தங்கள் வகுப்பறையில் அமர்ந்து தங்களது ஆசிரியர்களை பாடம் கற்றுத் தரச் சொல்லி மகிழ்ந்த மாணவர்கள் .

ஜெயங்கொண்டம் அருகே 15 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட மாணவர்கள் - தங்கள் வகுப்பறையில் அமர்ந்து தங்களது ஆசிரியர்களை பாடம் கற்றுத் தரச் சொல்லி  மாணவர்கள் மகிழ்ந்தனர்;

Update: 2025-05-25 10:54 GMT
அரியலூர், மே.25- அரியலூர் மாவட்டம் கல்லாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2010 - 2012 ஆண்டில் படித்த மாணவர்கள் 15 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது 15 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டவர்கள்  தாங்கள் படித்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை மகிழ்வுடன் ஒருவருக்கொருவர் கூறி தங்களது பள்ளிப் பருவத்தை நினைவு கூர்ந்தனர். பின்னர் தாங்கள் படித்த வகுப்பறையில் அமர்ந்து தங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை பாடம் நடத்தச் சொல்லி கடந்த காலங்களை நினைவு கூர்ந்த முன்னாள் மாணவர்கள் அவரவர்களின் குடும்பம் மற்றும் வேலை  குறித்து அக்கறையுடன் விசாரித்தனர். 15 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் முன்னாள் மாணவர்கள் சந்தித்த போது அவர்களின் முகங்களில் ஏற்பட்ட மகிழ்ச்சி நெகிழ்ச்சியான தருணமாக கருதப்பட்டது மேலும் 15 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்தித்துக்கொண்ட நிகழ்வை நினைவு கூறும் வகையில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இந்நாள் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Similar News