பிறந்த 15 வது நாளில் அனாதையாகி விடப்பட்ட ஆண் குழந்தை

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அனாதையாக விடப்பட்ட 15 நாள் ஆண்குழந்தை அரசு தத்துவள மையத்தில் ஒப்படைப்பு;

Update: 2025-06-05 14:40 GMT
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கடந்த மே 26ஆம் தேதி ஐந்தாவது நடைமேடையில் பிறந்து 15 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று அழுதபடி கிடந்ததை மீட்ட ரயில்வே காவல் துறையினர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் குழந்தையை பத்திரமாக மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து பராமரித்து வந்துள்ளனர். குழந்தைக்கு யாரும் சொந்தம் கொண்டாடவரவில்லை என்பதால் இன்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலிருந்து அரசு தத்துவள மையத்தில் குழந்தை பத்திரமாக சேர்க்கப்பட்டது. மேலும் ரயில்வே போலீசார் இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News