போச்சம்பள்ளியில் 15 டன் கொப்பரை ஏலம்.
போச்சம்பள்ளியில் 15 டன் கொப்பரை ஏலம்.;
கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் போச்சம்பள்ளி தலைமையகத்தில் 16.06.2025 திங்கள் கிழமை கொப்பரை பருப்பு ஏலம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இணைப்பதிவாளர் நடராஜன் அறிவுரையின் படி துணைப்பதிவாளர்/செயல் ஆட்சியர் பெரியசாமி,பொதுமேலாளர் டி.முருகன் மற்றும் சங்க பணியாளர்கள் செய்திருந்தனர். இதில் போச்சம்பள்ளி சுற்று வட்டாரம் மற்றும் வேப்பனப்பள்ளி. கிருஷ்ணகிரி ஆனந்தூர் பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களது கொப்பரை பருப்பை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தன ர். இதில் 15 டன் கொப்பரை பருப்பு ரூபாய் 131 முதல் 233 வரையிலும் (சராசரியாக 210 ரூபாய்) என மொத்தம் 2830000 ரூபாய்க்கு ஏலம் போனது. தங்கள் விளை பொருளுக்கு அதிகமான விலை கிடைத்ததால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர் மேலும் வாரந்தோறும் திங்கள் கிழமை கொப்பரை பருப்பு ஏலம் நடைபெறுகிறது. ஏலம் முடிந்த அன்றைய தினமே பணம் பெற்று விவசாயிகள் பயனடைகின்றனர்.