நாய்கள் கடித்து 15 ஆடுகள் பலி
காங்கேயம் அருகே நாய்கள் கடித்து 15 ஆடுகள் பலியாகியது;
காங்கேயம் அருகே பொத்தியபாளையம் தலிஞ்சிகாட்டுப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அப்புக்குட்டி (வயது 55) விவசாயி. இவர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் தனது தோட்டத்தில் 40 செம்மறி ஆடுகளை வழக்கம் போல் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது தெருநாய்கள் கும்பல் கடித்து குதறியதில் 15 ஆடுகள் இறந்தது. இதுபற்றி அறிந்ததும் வருவாய்த் துறையினர் மற்றும் காங்கேயம் போலீசார் அங்கு சென்று, இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர். மேலும், கால்நடை மருத்துவர் அங்கு வரவழைக்கப்பட்டு, இறந்த ஆடுகளின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. காங்கயம் பகுதிகளில் விவசாயிகள் தங்கள் வருமானத்திற் காக ஆடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வரு மானத்தில் பயனடைந்து வருகின்றனர். இதுபோல் தொடர்ந்து தெருநாய்கள் ஆடுகளை கடித்து கொன்று வருவது தொடர்கதையாகி வரும் நிலையில், விவசாயிக ளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்தவும், இறந்த ஆடுகளுக்கு உடன டியாக நிவாரணம் வழங்கவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.