காங்கேயத்தில் வி.ஹெச்.பி., சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா 15 சிலைகளுடன் விசர்ஜன ஊர்வலம்

காங்கேயத்தில் தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 15 சிலைகளுடன் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது..;

Update: 2025-08-27 14:40 GMT
காங்கேயம் சுற்று பகுதி முழுவதும் தமிழ்நாடு வி.ஹச்.பி., அமைப்பின் சார்பில் 15க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. காங்கேயம் நகரில் மட்டும் நேற்று 14 விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. பக்தர்கள் பொங்கலிட்டு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இன்று காலை முதல் கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனைகளும் செய்யப்பட்டது. மாலை காங்கேயம் தாராபுரம் ரோட்டில் உள்ள களிமேட்டில் நடைபெற்ற இந்நிகழ்சிக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சங்கரகோபால் சிறப்புரையாற்றினார். பின்னர் விசர்ஜன ஊர்வலத்தை மாநில இணை பொது செயலாளர் விஜயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக சென்று பழையகோட்டை ரோடு ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் நிறைவு பெற்றது. இதில் பா.ஜ.க., நிர்வாகிகள் நரேந்திரன், தமிழர் சிந்தனை பேரவை செந்தில்குமார், பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு திட்டுப்பாறை கீழ்பவானி கால்வாயில் கரைக்கப்பட்டது. காங்கேயம் ஏ.எஸ்.பி., அர்பிதா ராஜ்புட் தலைமையில், இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் உள்ளிட்ட 70 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News