மேலமாரியம்மன் கோவில் திருவிழா 150 க்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்*
மேலமாரியம்மன் கோவில் திருவிழா 150 க்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்*;
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேலமாரியம்மன் கோவில் திருவிழா 150 க்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் மேலமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 13 சமுதயாத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி விழா இன்று நடைபெற்றது. கடந்த இரண்டு வாரங்களாக விரதமிருந்த 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயபக்தியுடன் தீக்குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். மேலும் தீயணைப்புத் துறையினர் மற்றும் 100 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.