ஒகேனக்கல்லில் 1500 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1500 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு;

Update: 2025-03-14 05:25 GMT
தர்மபுரி மாவட்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சி அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான ஒகேனக்கல் காவிரி ஆறு தற்போது கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் வரை வினாடிக்கு 300 கன அடியாக நீர் வரத்து வந்து கொண்டிருந்தது இதனை அடுத்து ஒகேனக்கல் வனப்பகுதி மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பொழிந்த கன மழையின் காரணமாக மார்ச் 14 இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1500 கன அடி வீதம் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டுள்ளது. தொடர்ந்து கர்நாடக தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டலுவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் நீரின் அளவை கண்காணித்து வருகின்றனர்.

Similar News