ராயனூர் அருகே ரேஷன் அரிசி 1500 கிலோ காருடன் பறிமுதல்.அதிகாரிகள் நடவடிக்கை.
ராயனூர் அருகே ரேஷன் அரிசி 1500 கிலோ காருடன் பறிமுதல்.அதிகாரிகள் நடவடிக்கை.;
ராயனூர் அருகே ரேஷன் அரிசி 1500 கிலோ காருடன் பறிமுதல்.அதிகாரிகள் நடவடிக்கை. கரூர்- காரில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக மாவட்ட குடிமை பொருள் வழங்கல் துறை காவல் ஆய்வாளர் அரங்கநாதனுக்கு கிடைத்த தகவலின் பேரில், எஸ்ஐ கார்த்திகேயன் உள்ளிட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர். ராயனூர் - செல்லாண்டிபாளையம் சாலையில் காரில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த சீனிவாசன் என்பவரை குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறையினர் கைது செய்தனர், பிறகு காரில் 30 மூட்டைகளில் இருந்த 1500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் அதிகாரிகள்.