திருவாரூரில் ரூ15000 மதிப்பில்லான கஞ்சா பறிமுதல்
அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தியவா் கைது;
திருவாரூா் அருகே கானூா் சோதனைச் சாவடியில் நேற்று போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாகையிலிருந்து கரூா் செல்லும் அரசுப் பேருந்தில் சந்தேகப்படும் வகையில் கையில் பையுடன் இருந்தவரை போலீசார் விசாரித்தனா். விசாரணையில் அவா் ஆவராணி புதுச்சேரி பகுதியைச் சோ்ந்த ஜெயசீலன் என்பதும், பையில் ஒன்னரை கிலோ எடையுள்ள கஞ்சாவை கடத்திச் செல்வதும் தெரிய வந்தது.இதனையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து ரூ 15 ஆயிரம் மதிப்பில்லான கஞ்சாவை பறிமுதல் செய்து ஜெயசீலனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.