வெள்ளியணையில் சட்டவிரோத மது விற்பனை. இருவர் கைது. 152 மது பாட்டில்கள் பறிமுதல்.

வெள்ளியணையில் சட்டவிரோத மது விற்பனை. இருவர் கைது. 152 மது பாட்டில்கள் பறிமுதல்.;

Update: 2025-06-23 14:11 GMT
வெள்ளியணையில் சட்டவிரோத மது விற்பனை. இருவர் கைது. 152 மது பாட்டில்கள் பறிமுதல். வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பது குறித்து பெண் காவல் உதவி ஆய்வாளர் ரூபிணிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஜூன் 22ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது வெள்ளியணை தெற்கு பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை அருகே ஒரு தோட்டத்தில் மது விற்பனை நடப்பது அறிந்து , சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது வெள்ளியணை வடக்கு தேவேந்திரன் நகர் பகுதியைச் சேர்ந்த சோழப்பன் என்பவரும் , தாழியாபட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த ரவி என்பவரும் மது விற்பனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது இவர்களிடமிருந்து 146 குவாட்டர் மது பாட்டில்களும் 6- பீர் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த காவல்துறையினர் , அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Similar News