தந்தோனிமலையில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை 153 பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
தந்தோனிமலையில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை 153 பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
தந்தோனிமலையில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை 153 பிறந்தநாள் விழா கொண்டாட்டம். ஆங்கிலேயர் அதிகாரத்திற்கு எதிராக கப்பலோட்டிய தமிழன், சுதந்திரப் போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல் என்ற பெயர்களுக்கு சொந்தக்காரரான வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 153 வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர், தாந்தோணி மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு சோழிய வேளாளர் சங்கம் சார்பில், சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவசாமி தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கேக் வெட்டியும், அங்கு கூடியிருந்த மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் சோழிய வேளாளர் சங்க இளைஞர் அணி மாவட்ட தலைவர் பெரியசாமி, மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் சின்னையன், வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரம் பிள்ளைக்கு வீரவணக்கம் செலுத்தினர்.