குமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்க்குட்பட்ட 24 கிராம நிர்வாக அலுவலகத்திற்க்கான ஜமாபந்தி இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம்(ஜமாபந்தி )வருவாய தீர்வாய நிகழ்ச்சியில் கலந்து கொண்டுபொதுமக்களிடம் இருந்து155 மனுக்களை பெற்றுக் கொண்டு தீர்வு ஏற்படுத்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் வரப்பெற்ற மனுக்களில் இ.பட்டா கேட்ட 40 நபர்களுக்கும் முதியோர் ஓய்வூதியம் 6 நபர்களுக்கும் விதவை ஓய்வூதியம், 2 நபர்களுக்கு மான ஆணையினை வழங்கினார். இதில் தோவாளை தாசில்தார் கோலப்பன், தாசில்தார் (சமூக பாதுகாப்பு) தாஸ் , தாசில்தார் மூர்த்தி மற்றும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள் இந்த ஜமாபந்தி மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.