
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே இட்டகவேலியில் நீலகேசி அம்மன் கோயிலில் குழந்தை வரம் வேண்டியும் குழந்தைகள் நோய் நொடி இன்றி வாழவும் குழந்தைகள் தூக்க நேர்ச்சை வழிபாடு வித்தியாசமான முறையில் நடைபெறும். மரத்தால் செய்யப்பட்ட வில் வண்டியில் சுமார் 30 அடி உயர கம்பத்தில் தூக்கக்காரர்கள் எனும் நேர்ச்சைக்காரர்கள் அந்தரத்தில் தொங்கியபடி கையில் பச்சிளம் குழந்தைகளை ஏந்தி வர தூக்கவில்லை பக்தர்கள் தேவி எழுந்தருளியிருக்கும் பச்சை பந்தலை சுற்றி ஒருமுறை இழுத்து வருவது தூக்க நேர்ச்சை வழிபாடாக கருதப்படுகிறது. இந்த தூக்க நேர்ச்சை வழிபாடு நேற்று நடைபெற்றது இன்று 158 குழந்தைகள் இந்த தூக்க முயற்சி வழிபாட்டை நிறைவேற்றினர். இந்த தூக்க முயற்சி வழிபாட்டில் தமிழக மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்