சேலத்தில் வெள்ளிப்பட்டறை உரிமையாளர் வீட்டில் 16¾ பவுன் நகை திருட்டு

போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2025-03-08 07:40 GMT
சேலம் அழகாபுரம் ரெட்டியூர் என்.டி.எஸ். பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 59). இவர் வெள்ளிப்பட்டறை நடத்தி வருகிறார். ராஜேந்திரன் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு நெய்காரப்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கு இரவில் தங்கிவிட்டு நேற்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 16¾ பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அழகாபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். வெள்ளிப்பட்டறை உரிமையாளர் வீட்டில் நகை திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News