பெரம்பலூரில் வீட்டில் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் திருட்டு
விடுமுறை காலங்களில் திருடர்கள் அட்டகாசம் பொதுமக்கள் அச்சம்;
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் தொகுப்பு தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் செல்வராஜ் (எ) முகமது யூசுப் (55), கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் 24ஆம் தேதி மாலை தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று நள்ளிரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவை திறந்து பீரோவை உடைத்து அதிலிருந்த 13 லட்ச ரூபாய் மதிப்பிலான 16 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது யூசுப் சம்பவம் குறித்து ஊரக காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில், தடைய அறிவியியல் நிபுணர்கள் மற்றும் துப்பறியும் நாய் உதவியுடன் சம்பவஇடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தடயங்களை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிராமத்தின் மையப் பகுதியில் உள்ள வீட்டின் கதவை சாவி மூலம் திறந்து பீரோவை உடைத்து 16 பவுன் தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.முகமது யூசுப் கானின் வீட்டின் பூட்டிற்கு 2 சாவிகள் உள்ள நிலையில் மற்றொரு சாவியை காணவில்லை என்ற தகவலின் அடிப்படையில் தெரிந்த நபர்கள் எவரேனும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பெரம்பலூர் ஊரக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இச்சம்பவ் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.