மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் கோரிய கூலி உயர்வை உற்பத்தியாளர்கள் வழங்க ஒப்புதல் தெரிவித்ததால் 16 ஆவது நாளான இன்று வேலை நிறுத்த போராட்டம் மு
மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் கோரிய கூலி உயர்வை உற்பத்தியாளர்கள் வழங்க ஒப்புதல் தெரிவித்ததால் 16 ஆவது நாளான இன்று வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.*;
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி வட்டார மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் கோரிய கூலி உயர்வை உற்பத்தியாளர்கள் வழங்க ஒப்புதல் தெரிவித்ததால் 16 ஆவது நாளான இன்று வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம், சமுசிகாபுரம் பகுதிகளில் மருத்துவத்துணி உற்பத்தி செய்யும் 500 க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களிடம் உள்ள 5,000 விசைத்தறிகளை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 5,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ஒப்பந்தம் இந்த வருடம் காலாவதி ஆகிவிட்ட நிலையில், தொழிலாளர்களுக்கு கடந்த முறை போடப்பட்ட அதே ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் கோரிய கூலி உயர்வை உற்பத்தியாளர்கள் தர மறுத்ததால் 16 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வந்தது. இதனால் ரூபாய் 4.80 கோடி வரை ஊதிய இழப்பு ஏற்பட்டது. ஏற்கனவே நடைபெற்ற நான்கு கட்ட பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாத நிலையில், இன்று ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது உரிமையாளர்கள் கேட்ட கூலி உயர்வை உற்பத்தியாளர்கள் தர ஒப்புதல் தெரிவித்ததை தொடர்ந்து, மூன்று வருடங்களுக்கான புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வருவதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாளை முதல் சத்திரப்பட்டி வட்டாரத்தில் உள்ள ஐந்தாயிரம் விசைத்தறிகளும் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.