சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த வேன் - 16 பேர் காயம்

கானாடுகாத்தான் அருகே சாலையேர பள்ளத்தில் கவிழ்ந்த வேன் விபத்தில் 16 பேர் காயம்;

Update: 2025-07-15 06:51 GMT
சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் அருகே சுற்றுலாவேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 16 பேர் காயமடைந்த நிலையில், 6 பேர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 16 பேர் ராமேஸ்வரம் கோவிலுக்கு புறப்பட்டு வந்துள்ளனர். வேன் திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை மாவட்டம் நேமத்தான்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் வேனில் இருந்த 16 பேரும் காயம் அடைந்தனர். இதில், 6 வயது சிறுமி கீர்த்தி, திவ்யா (30), கார்த்தி (27),கோகிலா (35), நந்தகுமார் (50), குணசேகரன் (50) ஆகிய ஆறு பேர் பலத்த காயங்களுடன் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News