திருச்செந்தூரில் 16கோடி மதிப்பில் அன்தானக்கூடம் திறப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 16 கோடி மதிப்பிலான நாழிக்கிணறு அன்தானக்கூடம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகளை தமிழக முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்;
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 300 கோடி ரூபாய் மதிப்பீல் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகிறது. இதில் முடிவுற்ற பணிகள் ஒவ்வொன்றாக தொடங்கி வைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 11.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அன்னதானக்கூடம், 1.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சலவைக்கூடம், 3.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட நாழிக்கிணறு ஆகிய பணிகளை இன்றைய தினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதன் தொடக்க விழா திருச்செந்தூர் கோவிலில் உள்ள கலையரங்கத்தில் வைத்து நடந்தது. இதில் கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு, திருச்செந்தூர் கோட்டாட்சியர் கௌதம், டிஎஸ்பி மகேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.