குன்னூர் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் 160 ஆவது ஆண்டு விளையாட்டு விழா

குன்னூர் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் 160 ஆவது ஆண்டு விளையாட்டு விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.;

Update: 2025-07-06 15:39 GMT
குன்னூர் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் 160 ஆவது ஆண்டு விளையாட்டு விழா குன்னூர் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் 160 ஆவது ஆண்டு விளையாட்டு விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்கு சிறப்பு விருந்தினராக நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார். நீலகிரி மாவட்டம் புனித அந்தோனியார் மேல்நிலை பள்ளியில் 160 ஆவது ஆண்டு விளையாட்டு விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பள்ளியின் தாளாளரும் தலைமையாசிரியருமான அருட் சகோதரர் முனைவர் தாமஸ் செல்வம் தலைமை தாங்கினார். குன்னூர் நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவ மாணவிகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். உடலின் உறுதியே உயிர்நாடி என்ற தாரக மந்திரத்தை கருத்தாக கொண்டு அந்தோனியார் அணி, மாண்ட் போர்ட் அணி, லயோலா அணி, கபிரியேல் அணி என மாணவ மாணவிகளின் எழுச்சிமிகு அணிவகுப்பு நடைபெற்றது. பின்பு மாணவ மாணவிகளுக்கான 100 மீட்டர் 200 மீட்டர் 500 மீட்டர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள் நடைபெற்றன. இதில் மாணவர்களும் மாணவிகளும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தடகள போட்டியில் ஒட்டுமொத்தமாக 195 புள்ளிகளை பெற்ற மான்ட் போர்ட் அணி முதலிடம் பெற்று வெற்றி கோப்பையை தட்டி சென்றது. மேலும் மாணவரணி வகுப்பில் எழுச்சிமிகு நடை போட்டுவந்த கப்ரியேல் அணி மாணவர்களுக்கு சுழல் கோப்பை வழங்கப்பட்டது. விளையாட்டுப் போட்டியில் நடத்தப்பட்ட கண் கவர் உடற்பயிற்சியில் முதலிடம் பெற்ற மாண்ட் போர்ட் அணிக்கு சுழற் கோப்பை வழங்கப்பட்டது. மேலும் விளையாட்டுப் போட்டியின் போது ஒழுக்கத்தோடு ஆர்வத்தோடு கலந்து கொண்ட அந்தோனியார் அணி மாணவர்களுக்கும் சுழல் கோப்பை வழங்கப்பட்டது. விழாவில் நான்கு அணிகளில் உள்ள 1400 மாணவ மாணவிகள் இணைந்து நடத்திய கூட்டு உடற்பயிற்சி விழாவிற்கு மேலும் அழகு சேர்த்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் பெர்னாடிக், கிங்ஸ்லி ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் திரளாக பங்கேற்றனர்.

Similar News