பள்ளிமடைபட்டி குளத்தில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது. ரூபாய் 1650 பறிமுதல்.
பள்ளிமடைபட்டி குளத்தில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது. ரூபாய் 1650 பறிமுதல்.
பள்ளிமடைபட்டி குளத்தில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது. ரூபாய் 1650 பறிமுதல். கரூர் மாவட்டம், சிந்தாமணிப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக, காவல் உதவி ஆய்வாளர் கண்ணதாசனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் டிசம்பர் 25ஆம் தேதி மாலை 5 30 மணி அளவில் பள்ளிமடைபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள குளத்தில் பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர் மாவட்டம்,கடவூர் தாலுகா, வீரணம்பட்டியை சேர்ந்த கார்த்தி, வீரக்குமார், அருகில் உள்ள வீரியம்பட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், கூடலூர், பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த செல்வ பொன்ராஜ், திண்டுக்கல் மாவட்டம், கோட்டநத்தம்,குமரன் பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும் ரூபாய் 1650 முதல் செய்தனர். பின்னர் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் சிந்தாமணிபட்டி காவல்துறையினர்.