தொட்டியபட்டியில் 16.81 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா.
தொட்டியபட்டியில் 16.81 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா.;
தொட்டியபட்டியில் 16.81 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா. கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மொஞ்சனூர் ஊராட்சியில் உள்ள தொட்டியபட்டி முதல் சிவன்மலை வலசு சாலை வரை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 16.81 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி,ஒப்பந்ததாரர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் , ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவை சிறப்பித்தனர். தொடர்ந்து சாலை அமைக்கும் பணிக்காக தேவையான உபகரணங்களை கொண்டு பூஜை நடைபெற்றது. பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டி அனைவரும் வேண்டிக் கொண்டனர்.