ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் தறிக்க செய்து குழந்தை திருமணம் செய்த இளைஞர் அவருக்கு உடந்தையாக இருந்த பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு...*
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் தறிக்க செய்து குழந்தை திருமணம் செய்த இளைஞர் அவருக்கு உடந்தையாக இருந்த பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு...*;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் தறிக்க செய்து குழந்தை திருமணம் செய்த இளைஞர் அவருக்கு உடந்தையாக இருந்த பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தரபாண்டியம் அரிஜன் கீழத் தெருவை சேர்ந்தவர் சௌந்தரபாண்டியன் கூலி தொழிலாளி இவர் 17 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.இதனால் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். சிறுமியின் வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரங்களில் சௌந்தரபாண்டியனும் சிறுமியும் தனிமையில் இருந்துள்ளனர் இதனால் சிறுமி கர்ப்பமாகி உள்ளார். சிறுமி தான் கர்ப்பமாக உள்ளதாக பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில் சௌந்தரபாண்டியன் பெற்றோர்களை அழைத்து கலந்து பேசி யாருக்கும் தெரியாமல் நேற்று காலை சௌந்தரபாண்டியனுக்கும் சிறுமிக்கும் குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊர்நல அலுவலராக பணிபுரிந்து வரும் சகுந்தலா என்பவருக்கு தகவல் தெரியவந்தபோது குழந்தை திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள் மற்றும் இளைஞர் சௌந்தரபாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் சௌந்தரபாண்டியன் அவரது பெற்றோரகள், சிறுமியின் பெற்றோர்கள் உட்பட ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.