குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரிய விளையை சேர்ந்த 4 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 17 பேர் அடங்கிய மீனவ குடும்பத்தினர் நேற்று நாகர்கோவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றனர். பின்னர் அவர்கள் நாகர்கோவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அங்கு அனைவரும் மந்தி பிரியாணி சாப்பிட்டனர். இதையடுத்து அனைவரும் புறப்பட்டு ஊருக்கு சென்றனர். அப்போது திடீரென பிரியாணி சாப்பிட்ட அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அனைவரும் மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி பெற்றனர். தொடர்ந்து 15 பேர் குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், இரண்டு பேர் நாகர்கோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நாகர்கோவில் மற்றும் குளச்சல் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாரிகள் ஆஸ்பத்திரிகளில் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் பிரியாணி சாப்பிட்ட ஹோட்டலுக்கு சென்று விசாரணை நடத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அவர்களின் விசாரணைக்கு பிறகு பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கத்துக்கு காரணம் தெரிய வரும். நாகர்கோவில் ஓட்டலில் மந்தி பிரியாணி செய்யப்பட்ட 17 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.