
உளுந்துார்பேட்டை அருகே 7 வயது சிறுவனை, பாலியல் தொந்தரவு செய்த, 17 வயது சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.உளுந்துார்பேட்டை பகுதியை சேர்ந்த, 7 வயது சிறுவன், இரண்டாம் வகுப்பு படிக்கிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன், பாலியல் தொந்தரவு செய்தார். இது குறித்து புகாரின் பேரில் எடைக்கல் போலீசார், 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தொடர்ந்து அந்த சிறுவனை, விழுப்புரம் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சிறுவன், ஏற்கனவே பைக் திருட்டில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.