திருப்பத்தூர் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட கூலி தொழிலாளி போக்சோ வழக்கில் கைது

திருப்பத்தூர் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட கூலி தொழிலாளி போக்சோ வழக்கில் கைது;

Update: 2025-04-04 23:59 GMT
திருப்பத்தூர் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட கூலி தொழிலாளி போக்சோ வழக்கில் கைது
  • whatsapp icon
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட கூலி தொழிலாளி போக்சோ வழக்கில் கைது திருப்பத்தூர் மாவட்டம் ஜோதி மங்களம் பகுதியை சேர்ந்தவர் திலிப் குமார் (23) கூலி தொழிலாளியான இவர் திருப்பத்தூர் நகர பகுதிகளில் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.அப்போது 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு அந்த சிறுமியை காதலித்து வந்துள்ளார்.அதன் பின்னர் கடந்த 19 ஆம் தேதி ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்து சென்று திருமணம் செய்துகொண்டுள்ளார். இது குறித்து சிறுமி காணாமல் போனதாக சிறுமியின் பெற்றோர் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கூலி தொழிலாளி திலீப் குமாரை காவல் துறையினர் போக்சோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News