சேலம் சின்னதிருப்பதி பகுதியில் நேற்று 17 வயது சிறுவன் ஆட்டோக்காரர் ஒருவரிடம் சென்று வேலை வாங்கி கொடுக்குமாறு கூறினான். ஆனால் அந்த சிறுவன் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவன் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதை கவனித்த அவர் அந்த சிறுவனை மீட்டு கன்னங்குறிச்சி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த, பிளஸ்-1 மாணவன் என தெரியவந்தது. மேலும் அந்த மாணவன் பெற்றோரிடம் கோபித்து கொண்டு வீட்டில் இருந்த பணத்தை எடுத்து வந்தது தெரிந்தது. போலீசார் தொடர்ந்து சிறுவனிடம் தகவல் அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.