காங்கேயம் நத்தக்காடையூரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் பட்டப்பகலில் 17 பவுன் நகை ரொக்கம் ரூ.1.20லட்சம் கொள்ளை 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நத்தக்காடையூரில் தனியார் நிறுவன  மேலாளர் வீட்டில் 17பவுன் நகை ரொக்கம் ரூ.1.20லட்சம் பட்டப்பகலில் கொள்ளை அடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கேயம் காவல்துறை விசாரணை ;

Update: 2025-04-21 09:50 GMT
காங்கேயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் வேலன்நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராசு,45, இவர் காங்கேயத்தில் உள்ள தனியார் குளிர்பான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி கோகிலா,40, இருவரும் காலை தனது வீட்டை பூட்டிவிட்டு ஈரோடு அருகே பூந்துறையில் உள்ள அவரது தங்கை வீட்டிற்கு விசேஷத்திற்காக சென்றுள்ளார். பின்பு திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது,  உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயின் , மோதிரம், வளையல், தோடு என 17.5 பவுன் நகை மற்றும் ரூ.1.20 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்து. இதையடுத்து காங்கேயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டை சோதனை செய்தனர். மேலும் திருப்பூரில் இருந்து கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்ட தடையுங்கள் சேகரிக்கப்பட்டது. மோப்பநாய் வரவழைக்கப்பட்டு வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடி அது நின்றது. அருகிலுள்ள சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றார். இது குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். போலீசார் சோதனை சாவடி பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியாவும், ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் பட்டப்பகலில் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News