மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி இன்று ஆறாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரூபாய் 1.80 கோடி ஊதிய

மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி இன்று ஆறாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரூபாய் 1.80 கோடி ஊதிய இழப்பும், 5000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது.*;

Update: 2025-05-17 08:53 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி வட்டார மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி இன்று ஆறாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரூபாய் 1.80 கோடி ஊதிய இழப்பும், 5000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம், சமுசிகாபுரம் பகுதிகளில் மருத்துவத்துணி உற்பத்தி செய்யும் 500 க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களிடம் உள்ள 5,000 விசைத்தறிகளை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 5,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ஒப்பந்தம் இந்த வருடம் காலாவதி ஆகிவிட்ட நிலையில், தொழிலாளர்களுக்கு கடந்த முறை போடப்பட்ட அதே ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்களுக்கு கடந்த முறை போடப்பட்ட ஒப்பந்தமான முதல் வருடம் 13.5 பைசாவில் இருந்து இந்த ஆண்டு 1.5 குறைத்து 12 பைசாவும், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு வழங்கி வந்த ஒன்பது பைசாவில் இருந்து இந்த ஆண்டு ஒரு பைசா குறைத்து தலா எட்டு பைசா மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க மறுத்த விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆறு நாட்களாக நடைபெற்று வரும் வேலை நிறுத்தம் காரணமாக சத்திரப்பட்டி வட்டாரத்தில் உள்ள ஐந்து ஆயிரம் விசைத்தறிகளை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் ‌வேலை பார்த்து வந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் ரூபாய் 1.80 கோடி வரை ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாத நிலையில் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் எனவும், அரசின் கவனத்தை ஈர்க்க வரும் திங்கள் முதல் ஆர்ப்பாட்டம் காத்திருப்பு போராட்டம் உள்ளிட்ட தொடர் இயக்கங்களை நடத்த உள்ளதாகவும் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News